கதையை மாற்றுங்கள்

நீங்கள் சிறந்த யோசனையுடைய ஓர் ஆர்வமுள்ள பெண் பாட்காஸ்டரா?

Spotify பாட்காஸ்ட் அட்டவணைகளில் உள்ளவை தவிர - இந்தியாவில் எல்லா இடங்களிலும் பெண் குரல்கள் வலுவாக உள்ளன. நாங்கள் அவை அனைத்தையும் மாற்ற விரும்புகிறோம்.

பலதரப்பட்ட அடுத்த தலைமுறைப் படைப்பாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காகவே Sound Up தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பெண் படைப்பாளர்கள் மைக்கைப் பயன்படுத்தி தங்களின் தனித்துவமான கதைகளை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கான இடத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இத்திட்டத்தில் சேர உங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. பேரார்வம் தான் இங்கே முக்கியம் – அத்துடன் சிறந்த யோசனைகளும், உரையாடல்களை சிறப்பாக மாற்றுவதற்கான விருப்பமும் இருந்தால் போதும்.

செயலில் உள்ள நிகழ்வுகள்

செயலில் உள்ள நிகழ்வுகள் எதுவும் தற்போது இல்லை. புதிய நிகழ்வுகளைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள காத்திருங்கள்.

இத்திட்டத்தைப் பற்றிய ஓர் அறிமுகம்

2018-இல் ஓர் உள்ளூர் முயற்சியாகத் தொடங்கப்பட்ட Sound Up இன்று உலகளாவிய திட்டமாக வளர்ந்து, உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள படைப்பாளர்களை சென்றடைகிறது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியக் கண்டம் முழுவதும் பெண் குரல்கள் கொண்டாடப்படுவதையும் கேட்டு ரசிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக நாங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளோம்.

Content image

என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்

இத்திட்டத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எங்களுடன் இணைவதற்கு நாங்கள் பத்து படைப்பாளர்கள் வரை அழைக்கிறோம். இந்நிகழ்ச்சிகள் இந்தியாவில் மெய்நிகராக நடத்தப்படுகின்றன, மேலும் அவை ஒரு பாட்காஸ்ட்டை உருவாக்கும் கலையில் நான்கு வார காலத்துடன் தொடங்குகின்றன. Spotify குழுவினர் மற்றும் எங்கள் கூட்டாளர்களுடன் நேரலைப் பயிற்சி வகுப்புகள், பதிவுசெய்யப்பட்ட அமர்வுகள் மற்றும் ஒருவருக்கு ஒருவர் என்ற வகையிலான சந்திப்புகள் ஆகியவற்றின் மூலம், வியக்கத்தக்க யோசனைகளை உருவாக்குதல், கதை சொல்லுதல் முதல் நேர்காணல் செய்தல், எடிட்டிங் மற்றும் தயாரிப்பு வரை அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள். சில வீட்டு பாடப்பயிற்சிகளையும் நீங்கள் நிறைவு செய்ய வேண்டியிருக்கும், மேலும் எங்களுடனான நான்கு வாரகாலத்தின் முடிவில் ஓர் ஆடியோ திட்டப்பணியைச் சமர்ப்பிக்கும்படியும் உங்களைக் கேட்டுக்கொள்வோம். எல்லாம் சரியாக சென்றால், அடுத்த கட்டத்திற்கு எங்களுடன் இணையுமாறு உங்களை அழைப்போம், அதில் நீங்கள் உங்களின் சோதனை எபிசோடை தயார் செய்வீர்கள்.

Content image

நாங்கள் யாரைத் தேடுகிறோம்?

வளர்ந்து வரும் ஆடியோ மற்றும் பாட்காஸ்டிங் துறையில் உள்ள ஆதாரங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அணுகலை இதுவரை கொண்டிருக்காத கதைசொல்லும் திறன் கொண்டவர்களை எங்கள் திட்டம் வரவேற்கிறது. நீங்கள் பேரார்வமுள்ள பெண் படைப்பாளராக இருந்து, இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் இதில் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். சிறந்த பாட்காஸ்டுக்கான உங்கள் யோசனையை எங்களிடம் தெரிவியுங்கள். அதைத் தொடர்ந்து நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம்.

Content image

நிபுணர்களைச் சந்தியுங்கள்

Sound Up மூலம் அந்தப் பங்காளருடன் நீங்கள் இணைந்து பணியாற்ற உள்ள நிபுணர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

Avatar
மே மரியம் தாமஸ்

மே மரியம் MaedinIndia-இன் நிறுவனர் ஆவார். இவர் ஒரு தொகுப்பாளர், போட்காஸ்ட் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழில்முனைவர் மற்றும் குரல் பதிவுக் கலைஞரும் ஆவார். இவர் வானொலித் துறையில் ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவமும், போட்காஸ்டிங்கில் 5 ஆண்டு அனுபவமும் கொண்டவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் வேல்ஸில் உள்ள ஒரு சமூக வானொலி நிலையத்திற்குச் செய்தி ஆசிரியர்/பத்திரிக்கையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 2010-இல் இந்தியாவுக்குத் திரும்பியபோது, வானொலியில் தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் மேனேஜராகத் தொடர்ந்து பணியாற்றினார்.

மேலும் வாசிக்க
Avatar
ரியா முக்கர்ஜீ

ரேடியோ மிர்ச்சியில் பல்வேறு தலைமைப் பதவிகளில் 15 ஆண்டுகாலம் பணியாற்றிய அனுபவத்துடன், ரியா 2014-இல் ஒரு சுயாதீன ஆலோசகரானார். இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஸ்ட்ரீமிங் தளங்கள், செயலிகள் மற்றும் வலைத்தளங்கள், வானொலி நிலையங்கள், விளம்பர நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன வணிகங்களுக்கு இசை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்குகிறார்.

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

ஊடகங்களில்

உலகெங்கிலும் இருந்து சவுண்ட் அப் பற்றி மேலும் பதிவு செய்திகள் பிரிவில் கண்டறியவும்.

மேலும் வாசிக்

அட்டவணைகளில் புதியவை

எங்களின் முன்னாள் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு, எங்களின் ரசனையாளர்களால் விரும்பப்பட்ட சிறந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு ரசித்திடுங்கள்.

Podcast thumbnail
US